கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு இழுத்து மூட வேண்டும், போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் - காரைக்காலில், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு இழுத்து மூட வேண்டும், போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக காரைக்காலில் இன்று (02.10.2013) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் காரைக்கால் புதிய பேருந்து நிலைய வாயிலில் நடைபெற்றது, இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹம்மது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகிய கட்சியின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள், மேலும் இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி காரை நகர தலைவர் ஜெகபர் சாதிக், தமுமுக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், தமுமுக மாவட்ட தொண்டரணி செயலாளர் முஹம்மது ஜியாவுதீன், தமுமுக நகர துணை செயலாளர்கள் புஹாரி, ஷெரிப், கிளை நிர்வாகிகள் முஹம்மது இக்பால், முஹம்மது யூசுப், முஹம்மது பயாஸ், ஷாகுல் ஹமீது உட்பட ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.




