அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, October 1, 2013

காரைக்காலில் - ம.ம.க கவன ஈர்ப்பு போராட்டங்கள்

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்டோபர் 1 முதல் 10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்த தலைமை விடுத்த அறிவிப்பின்படி காரைக்கால் மாவட்டத்தில், இன்று போராட்டம் ஆரம்பம் ஆனது, முதல் கட்டமாக நிரவி திருபட்டினம் தொகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்,தனியார் கல்விக்கூட கட்டணத்தை முறைபடுத்த வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், காரை நகரப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும், நாய் மற்றும் மாடுகளை பிடிக்க வேண்டும், ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், புறம்போக்கு இடங்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், GLR மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும், காரைக்காலுக்கு அறிவிக்கப்பட்ட மும்பை மற்றும் திருச்சி ரயில்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க தடை விதிக்க வேண்டும், தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதைத் தடுக்கும் அவசரச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதா மாதம் டீசல் விலையை உயர்த்த வழங்கியுள்ள அதிகாரத்தையும் திரும்பப் பெற வேண்டும், மழைக் காலம் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மலேரியா, டெங்கு, சிக்குன்-குன்யா போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும், மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது தலைமை வகித்தார், மாவட்ட துணை செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் முஹம்மது இக்பால், மனிதநேய தொழிற்சங்க பொருளாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார், இப்போராட்டத்தில் மாவட்ட தொண்டரணி செயலாளர் முஹம்மது ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், நகர தலைவர் ஜகபர் சாதிக், நகர செயலாளர் கமால் ஹுசைன், நகர துணை செயலாளர் அன்சாரி, கிளை நிர்வாகிகள் புஹாரி, முஹம்மது தாரிக், அப்துல் காதர், இக்பால், ஆசிக், பாசித், ஆரிப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP