



புதுச்சேரி மாநிலம் புதுச்சேரியில் தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக 29-09-2013 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாவட்ட அமைப்பு குழு தலைவர் J.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது, ஈத்கா பள்ளி இமாம் மௌலவி M.மன்சூர் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார், புதுச்சேரி அமைப்பு குழு உறுப்பினர்கள் S.சாகுல் ஹமீது, A.அஷ்ரப் அலி, காரைக்கால் மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூபக்கர் அஜ்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக காரைக்கால் மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், புதுச்சேரி மாநில வியாபாரிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் S.பாலு, விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்பு செயலாளர் பாவாணன், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் கோ.அ.ஜெகநாதன், தமிழர் தேசிய இயக்க தலைவர் இரா.அழகிரி,
நீதிமக்கள் கிறிஸ்தவர்கள் நல சங்க தலைவர் A S விக்டர், புதுவை புலனாய்வு இணையதள G.ராஜாராமன், திராவிட விடுதலை கழக தலைவர் லோகு.ஐயப்பன், தமுமுக குவைத் மண்டல தலைவர் I.முஹம்மது பாதுஷா, தமுமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் M.Y.முஷ்தாக்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் மவ்லவி J.S.ரிஃபாயி, தமுமுக பொது செயலாளர் P.அப்துல் சமது, ம.ம.க அமைப்புச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில தொண்டரணி செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள், இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகள், காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.