அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, October 27, 2013

காரைக்கால், புதுத்துறையில் - தமுமுக ரத்த தான முகாம்

காரைக்கால் நகரம்,  புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, புதுத்துறை முத்தவல்லி முஹம்மது யாசின், மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், ஆசிரியர் ராஜகோபால், EX Serviceman சைமன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் முஹம்மது சிக்கந்தர், மாவட்ட தொண்டரணி அணி செயலாளர் முஹமது ஜியாவுதீன், நகர துணை செயலாளர் புஹாரி, கிளை செயலாளர் முஹம்மது பயாஸ், கிளை பொருளாளர் சாகுல்  ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ஹாஜா ராஜிக், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் முஹம்மது இக்பால், காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், நிரவி கிளை நிர்வாகிகள் யூனுஸ், புருஹானுதீன், வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அரசு பொது மருத்துவமணை கண்காணிப்பாளர் மு.கந்தசாமி உத்தரவின் பெயரில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உதயகுமார், இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் காந்தி,செவிலியர் லலிதா, லேப் டெக்னிசியன் சாந்தி ஆகியோர் ரத்த சேகரிப்பு செய்தனர், இம்முகாமில் 30 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை மருத்துவ சேவை அணி செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர்கள் ஜாகிர் ஹுசைன்,முஹம்மது நவீன், தொண்டர் அணி கிளை செயலாளர் தௌபிக், மனிதநேய தொழிற்சங்க கிளை செயலாளர் அஜ்மல், மனிதநேய வர்த்தக சங்க கிளை செயலாளர் முஹம்மது பாஹிம், ஹாஜா ஷரிப், முஹம்மது பைசல், அர்ஷத் அஹமது, இஸ்மாயில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP