மனிதநேய மக்கள் கட்சி - காரைக்காலில் - தெருமுனை பிரச்சாரம்
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்டோபர் 1 முதல் 10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்த தலைமை விடுத்த அறிவிப்பின்படி காரைக்கால் மாவட்டத்தில் நிரவி திருபட்டினம் தொகுதி, திருநள்ளார் தொகுதியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக காரைக்கால் (வடக்கு) மற்றும் காரைக்கால் (தெற்கு) தொகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், காரை நகரப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும், நாய் மற்றும் மாடுகளை பிடிக்க வேண்டும், ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், GLR மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும், காரைக்காலுக்கு அறிவிக்கப்பட்ட மும்பை மற்றும் திருச்சி ரயில்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க தடை விதிக்க வேண்டும், உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மேற்கு புறவழிசாலையை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்கால் மாவட்ட மக்களுக்கான பாஸ்போர்ட் சேவையை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு மாற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் நகர தலைவர் ஜகபர் சாதிக் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட மனிதநேய வர்த்தகசங்க செயலாளர் ஹசனுதீன், மாவட்ட மனிதநேய வணிகர் சங்க பொருளாளர் செய்யது இப்ராஹிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் முஹம்மது இக்பால், , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஷெரிப் ஆகியோர் சிறப்புரையாற்றினார், இப்போராட்டத்தில் காரை நகர செயலாளர் கமால் ஹுசைன், மாவட்ட தொண்டரணி செயலாளர் முஹம்மது ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், நகர பொருளாளர் முஹம்மது சபுருதீன், நகர துணை தலைவர் ஷாஹுல் ஹமீது, கிளை நிர்வாகிகள் கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, நிரவி கிளை தலைவர் முஹம்மது யூனுஸ், நகர துணை செயலாளர் புஹாரி, புதுத்துறை கிளை நிர்வாகிகள் முஹம்மது யூசுப், முஹம்மது ராஜிக், முஹம்மது பயாஸ், சாகுல் ஹமீது, எஸ்.ஏ.நகர் கிளை செயலாளர் பீர் முஹம்மது உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்





