அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, October 13, 2013

வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும் ... தமுமுக தியாக திருநாள் வாழ்த்து

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காரைக்கால் மாவட்ட தலைவர் எம்.ஷேக் அலாவுதீன் வெளியிடும் பத்திரிக்கை செய்தி  :

மனித சமூகம் தியாகத்தை நினைவு கூறும் உன்னத நாளாக தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈதுல் அல்கா விளங்குகிறது.

தியாகத்தின் மேன்மையை பறை சாற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் அனைத்து நலன்களும் பெற்று நல்வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.

முஷாபர் நகர் பகுதியில் இன்றுவரை லட்சத்திற்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் வாடும் அவல நிலை , சர்வதேச சந்தையில் இந்திய நாணய மதிப்பின் வீழ்ச்சி , விலைவாசி ஏற்றம் , பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரிப்பு,   மது விலக்கு ஒழிக்கப்படாதது உள்ளிட்டவை நம் மனதை வருத்தி வருகின்றன. இது போன்ற துயர நிகழ்வுகளை, தீமைகளை முறியடித்து மக்கள் நலம் பேண நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூணவேண்டும்

 

இந்திய திருநாட்டில் ஒற்றுமை பேணி வாழும் மக்களின், மத்தியில் சண்டை , பிளவு , பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்த மத வாத பாசிச சக்திகள் முயன்று வருகின்றன. அதனை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க இந்த தியாக திருநாளில் சபதம் ஏற்போம்

 

எம்.ஷேக் அலாவுதீன் மாவட்ட தலைவர் - த மு மு க



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP