அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, January 18, 2014

முசாபர் நகர், அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்காக நிவாரண நிதி ரூ.1,50,420/- காரைக்கால் மாவட்ட மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

உத்திரபிரதேச மாநிலம், முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்காக நிவாரண நிதி திரட்டி தருமாறு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தமுமுக தலைமையிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 கோடி ரூபாய் வசூல் செய்து அம்மக்களுக்கு அனுப்ப தமுமுக தலைமை முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வசூல் செய்ய பணித்தது. அதனை ஏற்று காரைக்கால் மாவட்ட மக்களிடம் நிவாரண உதவி கோரி தமுமுக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையிலும், ஒவ்வொரு வீடுதோறும் வசூல் செய்யப்பட்டது.

இந்த வசூலின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் வசூலான தொகை - ரூ.1,61,990/-

வசூல் விபரங்கள் :
1. ஜும் ஆ, காரைக்கால்  (பெரியப்பள்ளி, மெய்தீன் பள்ளி, KIDC, ஹிலுருபள்ளி) ரூ.15,260/-
2. காரைக்கால் நகரம் (2 செக் உட்பட)  - ரூ.69,632/-
3. அம்பகரத்தூர் - ரூ.21,606/-
4. திருபட்டினம் - 19,195/-
5. நிரவி - ரூ.17,745/-
6. புதுத்துறை - ரூ.14,666/-
7. நல்லம்பல் - ரூ.3,886/-

5 நாட்கள் வீடு வீடாக வசூல் செய்ய மைக் செட், தள்ளு வண்டி, TATA ACE, நோட்டீஸ் ஆகியவற்றிற்கான செலவு ரூ.11,570/-

மீத தொகை ரூ.1,50,420/- தமுமுக தலைமைக்கு செக் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் வசூலாகும் தொகைகளை தமுமுக மூத்த தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ், M.L.A., அவர்களின் தலைமையில் மூத்த தலைவர் S.ஹைதர் அலி, மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கொண்ட குழு முசாபர் நகர் நேரில் சென்று அம்மக்களிடம் இறைவன் நாடினால் வழங்கவுள்ளது.

தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிதியை தாராளமாக வாரி வழங்கிய காரைக்கால் மாவட்ட மக்களுக்கும், மைக் மூலம் அறிவிப்பு செய்து மக்களிடம் வசூல் செய்ய அனுமதி வழங்கிய காவல்துறை அதிகாரிகளுக்கும், மிக குறைந்த வாடகையில் மைக் கொடுத்து உதவிய ALEX சவுண்ட் சர்வீசூக்கும், 5 நாட்களாக அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி வீடு வீடாக வசூல் செய்த தமுமுகவின் காரைக்கால் நகர மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP