காரைக்கால் GOOD SHEPHERD பள்ளியில் மாணவர்களை வதைத்தல் - தனியார் கல்வி கூடங்களில் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆர்வம் காட்டுதலை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு
பத்திரிக்கை அறிக்கை
தற்போதுள்ள கால சூழ்நிலையில் கல்வி கூடங்களுக்கு மத்தியில் மாணவர்களை கல்வியில் தரம் உயர்த்தி தனது பள்ளிக்கூடத்தை SSLC மற்றும் HSC தேர்வில் முதல் நிலை கல்விக்கூடமாக கொண்டு வர முயற்சிப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேவேளையில், காரைக்காலில் உள்ள GOOD SHEPHERD ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளை மதிய உணவு வீட்டிலிருந்து கொண்டு வரக்கூடாது என்றும், அந்த உணவுக்குண்டான தொகையை பள்ளிக்கூடத்திலேயே செலுத்தி, உணவை பள்ளிக்கூடத்திலேயே பெற்று சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், மேலும் பனிரெண்டாம் வகுப்பில் இந்த ஆண்டு GOOD SHEPHERD பள்ளிக்கூடம் முதல் இடத்தை பிடிக்க வேண்டுமென்பதற்க்காக பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளை மிகவும் கஷ்டப்படுத்தி உணவுக்கூட சாப்பிட விடாமல், அவர்களை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இதனால் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் பெற்றோர்கள் புகார் செய்கின்றனர். ஆகவே, தாங்கள் நேரடியாக அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று இது சம்பந்தமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.காரைக்கால்.மாவட்ட ஆட்சியருக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் M.நெய்னா முஹம்மது அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :