நிரவி ONGC அருகில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற கோரி - மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்
சிறிய மாநிலமான புதுச்சேரியில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடை என 393 மதுபானக் கடைகள் உள்ளன. புதுச்சேரிக்கு தற்போதுள்ள கடைகளே அதிகமாகும். இந்த மதுக்கடைகள் தவிர்த்து நூற்றுக்கணக்கான சாராயக்கடைகளும், கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்நிலையில் புதிதாக 80 மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பது மக்கள் நலனுக்கு எதிரான செயலாகும். எனவே, புதுச்சேரி அரசு மக்கள் நலன் கருதி
- புதுச்சேரி மாநிலத்தில் தற்பொழுது 80 மதுபானக்கடைகள் திறக்க வெளியிட்ட அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,
- புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்,
- தேசிய நெடுஞ்சாலை, கல்விக்கூடம், மத வழிப்பாட்டுத்தலம் அருகில் நிரவி சாலை தொடக்கத்தில் ONGC அருகில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
- திருபட்டினம் கடைதெருவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
- காரைக்கால், புதுத்துறை பாலம் இறக்கத்தில் ஏராளமான குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாராயக்கடையை அகற்ற வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் நிரவி ONGC அருகில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை முற்றுகையிட முயற்சி செய்தனர். முற்றுகையிட சென்ற மனிதநேய மக்கள் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் , மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் யூசுப்கான், முஹம்மது மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் காரை நகர தலைவர் ஜெகபர் சாதிக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் முஹமது ஹசனுதீன், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் இக்பால், நகர செயலாளர் கமால் ஹுசைன், நிரவி கிளை தலைவர் யூனுஸ், திருபட்டினம் கிளை தலைவர் முஹம்மது தாரிக், கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், அம்பகரத்தூர் கிளை தலைவர் செய்யது முபாரக், புதுத்துறை கிளை தலைவர் யூசுப், பயாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுக்காப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில், நிரவி உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் உட்பட காவல்துறையினர் செய்திருந்தனர்.- புதுச்சேரி மாநிலத்தில் தற்பொழுது 80 மதுபானக்கடைகள் திறக்க வெளியிட்ட அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,
- புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்,
- தேசிய நெடுஞ்சாலை, கல்விக்கூடம், மத வழிப்பாட்டுத்தலம் அருகில் நிரவி சாலை தொடக்கத்தில் ONGC அருகில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
- திருபட்டினம் கடைதெருவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
- காரைக்கால், புதுத்துறை பாலம் இறக்கத்தில் ஏராளமான குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாராயக்கடையை அகற்ற வேண்டும்




