மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் மற்றும் மாவட்ட துணை செயலாளருமான சாதிக் அலி தலைமையில் 23.3.2014 அன்று காரைக்கால் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் A.M.H.நாஜிம் அவர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற செய்வது என முடிவு செய்யப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல் ரஹீம், திமுக மாநில துணை அமைப்பாளர் ஆசைதம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் யூசுப்கான், ஹாஜா மெய்தீன், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் கமால் ஹுசைன், மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முஹம்மது ரியாஸ், கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப், செயலாளர் முஹம்மது பயாஸ், அம்பகரத்தூர் கிளை தலைவர் செய்யது முபாரக், செயலாளர் முஹம்மது ரியாஸ், நிரவி கிளை தலைவர் முஹம்மது யூனுஸ், செயலாளர் புர்ஹானுதீன், திருபட்டினம் கிளை பொருளாளர் முஹம்மது ஆசிக், வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல் காதர், திருநள்ளார் கிளை செயலாளர் முஹம்மது கனி உட்பட கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


