அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, March 23, 2014

புதுச்சேரி அரசு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சார்பாக இரத்ததானம் செய்து வரும் தமுமுக உள்ளிட்ட அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி அரசு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சார்பாக இரத்ததானம் செய்து வரும் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளடக்கிய பயிற்சி முகாம் மற்றும் இரத்ததானம் செய்து வருபவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி காரைக்காலில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr.கந்தசாமி,  காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி Dr.உதயக்குமார் உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டு பயிற்ச்சியும் பரிசளிப்பும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமுமுக மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் முஹம்மது பயாஸ். தமுமுக நகர தலைவர் ஜெகபர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் கமால் ஹுசைன், புதுத்துறை  கிளை தலைவர் முஹம்மது யூசுப் உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP