அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, March 3, 2014

1,420 தற்காலிக அரசு ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்திய முதல்வர் ரங்கசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு - பணி வழங்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது வெளியிட்ட அறிக்கை:

பணிநீக்கம் செய்யப்பட்ட 4000 ஊழியர்களில் முதற்கட்டமாக 1,420 ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் கால்நடைத்துறையில் இன்று  (3.3.14) முதல் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே வேளையில், அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் ரூ.137 என மூன்று மணி நேரத்திற்கு குறைவாக பணி செய்யும் பகுதி நேர ஊழியர்களின் (Part time staffs) சம்பளமான ரூ.4091/- ஐ கணக்கு வைத்து வழங்கப்படுவது, அவர்களை வஞ்சிக்கும் செயலாகும். 6 வது ஊதிய குழுவில் பகுதி நேர ஊழியர்களை நியமிக்கக்கூடாது என அறிவித்திருந்தும் மறைமுகமாக பகுதிநேர ஊழியர்களை நியமிப்பது சரியானதல்ல. மேலும் இந்த தொகை ரூ.4091/- வைத்து கொண்டு அவர்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? எனவே, மீண்டும் பணி வழங்கப்பட உள்ள ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு புதுச்சேரி அரசின் குறைந்த பட்ச தினக்கூலியான ரூ.364 தொகையை அவர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டும் அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேலாக பணி செய்யும் பகுதி நேர ஊழியர்களின் (Part time staffs) சம்பளமான ரூ.5453/ ஐ சம்பளமாக வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

அன்புடன் 


(எம்.நெய்னா முஹம்மது)

மாவட்ட செயலாளர்


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP