அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, February 12, 2014

புதுச்சேரி மாநில அரசின் VAO (கிராம நிர்வாக அதிகாரி) தேர்வு தேதியை மாற்ற வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் M.நைனா முஹம்மது அவர்கள் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் , முதல் அமைச்சர் மற்றும் தலைமை செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது

மத்திய அரசின் MTS (Multi Tasking Staff ) ஊழியர்களை தேர்வு செய்ய வரும் 16.02.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளதாக Staff Selection Commission அறிவித்துள்ளது, அதுபோல் புதுச்சேரி மாநில அரசு VAO (கிராம நிர்வாக அதிகாரி) தேர்வு செய்ய அதே 16.02.2014 அன்று தேர்வு நடைபெறும் என புதுச்சேரி வருவாய் துறை அறிவித்துள்ளது. இந்த இரண்டு பதவிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய அரசின் MTS (Multi Tasking Staff ) மற்றும் புதுச்சேரி மாநில அரசின் VAO (கிராம நிர்வாக அதிகாரி) ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதால் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தேர்வு எழுத செல்பவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

எனவே, புதுச்சேரி அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநில அரசின் VAO (கிராம நிர்வாக அதிகாரி) தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டுமென அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
 
அன்புடன்

(M.நைனா முஹம்மது)
மாவட்ட செயலாளர்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP