அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, February 7, 2014

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதி பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு

காரைக்கால் மாவட்டம்,  புதுத்துரையில் மனிதநேய மக்கள் கட்சி கிளை பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் M.Z.முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, தமுமுக கிளை செயலாளர் A.முஹம்மது பயாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், நகர தலைவர் ஜெகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் கிளை பொருளாளர் A.ஷாகுல் ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மான நகலை காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் இன்று நேரில் வழங்கப்பட்டது.

தீர்மானங்கள்

1. காரைக்கால் நகரம், தருமபுரம் (புதுத்துறை) வார்டுக்கு நியமிக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (VAO) அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து பணி  செய்ய வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. வாகனங்களில் வருபவர்கள் புதுத்துறை பள்ளிவாசல் மற்றும் அரசு பள்ளிக்கூடம் அருகில் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன, எனவே மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி புதுத்துறை பள்ளிவாசல் மற்றும் அரசு பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.
காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் திரியும் மாடுகள், நாய்கள் மற்றும் பன்றிகளால்  அடிக்கடி விபத்தும் மற்றும் நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன, எனவே, மாவட்ட நிர்வாகம் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கவும், நாய் மற்றும் பன்றிகளை கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

4. காரைக்கால் நகரம், தருமபுரம் (புதுத்துறை) வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாமல் குப்பைகள் சாலைகளில் அடர்ந்து கிடக்கின்றன, எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தருமபுரம் (புதுத்துறை) வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.


தகவல் எம்.ஷேக் அலாவுதீன்


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP