அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, February 5, 2014

காரைக்கால் தமுமுகவின் முயற்சியால் - வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், இந்திரா நகரை சேர்ந்தவர் மீராமெய்தீன், இவரது மகன் அப்துல் ரஹ்மான் (வயது 14), இவன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அப்துல் ரஹ்மான் வீடு திரும்பவில்லை. இதனால் அவனது பெற்றோர் அவனை பல இடங்களில் தேடி பார்த்தனர், ஆனால் எங்கேயும் கிடைக்காததால்,இது குறித்து புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமுமுக காரைக்கால் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர துணை செயலாளர் புஹாரி ஆகியோர் காரைக்கால் தலதெருவில் உள்ள மனிதநேய ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சென்றபோது, அங்கிருந்த அப்துல் ரஹ்மானை அழைத்து விசாரித்தபோது, கும்பகோணத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனை அருகில் அவனது வீடு இருப்பதும், வீட்டில் உள்ளவர்கள் நோன்பு வைத்தபோது தானும் நோன்பு வைப்பதாக கூறியபோது அம்மா வேண்டாம் என்று கூறியதால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி காரைக்காலுக்கு வந்து சிலகாலம் கோட்டுச்சேரியில் உள்ள நவக்கிரஹா ஆதவற்றோர் இல்லத்தில் இருந்து விட்டு, தற்பொழுது இந்த இல்லத்தில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தான்.

இதனை தொடர்ந்து, கும்பகோணம் தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட காரைக்கால் தமுமுகவினர் சிறுவன் அப்துல் ரஹ்மான் கூறிய தகவலை கூறி அவனது பெற்றோரை கண்டுபிடித்து தகவலை தெரிவிக்கும்படி கேட்டு கொண்டனர். அதன்படி கும்பகோணம் தமுமுக நிர்வாகிகள் அவனது பெற்றோரை கண்டுபிடித்து தகவலை தெரிவித்தனர். அதை தொடர்ந்து, சிறுவனின் சகோதரர் செய்யது அபுதாகிர், மைத்துனர் சாகுல் ஆகியோர் காரைக்கால் வருகை தந்து தமுமுக நிர்வாகிகளை சந்தித்தனர். அவனது பெற்றோர் மற்றும் மனிதநேய ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி அருள் ஆகியோருடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முத்தம்மா I.A.S அவர்களை தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் கமால் ஹுசைன், புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப்  ஆகியோர் சந்தித்து தகவலை எடுத்து கூறி, அந்த சிறுவனை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP