அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, July 15, 2014

பயங்கரவாத இஸ்ரேலைக் கண்டித்து - காரைக்காலில் - தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



அப்பாவி பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் தமுமுக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் நைனா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், கழக பேச்சாளர் ஹாஜி அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் ஜியாவுதீன், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர பொருளாளர் சபுருதீன், மமக நகர செயலாளர் கமால் ஹுசைன்,  புதுத்துறை கிளை தலைவர் யூசுப், செயலாளர் முஹம்மது பயாஸ், அம்பகரத்தூர் கிளை தலைவர் செய்யது முபாரக், திருபட்டினம் கிளை செயலாளர் முஹம்மது ஆஷிக், நகர துணை செயலாளர் புஹாரி, முன்னாள் மாவட்ட  கிளை கழக நிர்வாகிகள் லியாகத்  அலி, ஷாஜஹான், லெப்பை உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் காசிம் நன்றி கூறினார


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP