காரைக்காலில் - தமுமுக ரத்த தான முகாம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் நிஜாமுதீன் ஹாலில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நைனா முஹமது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் அலாவுதீன், சமூக ஆர்வலர் முஹம்மது நைனா மரைக்காயர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுக்காப்பு அணி செயலாளர் முஹம்மது ஜெக்கரியா, மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் சர்புதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்பர்ஷா, மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் இப்ராஹிம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர், அரசு பொது மருத்துவமணை கண்காணிப்பாளர் சித்ரா உத்தரவின் பெயரில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உதயகுமார், இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் காந்தி, செவிலியர் ஜாஸ்மின், லேப் டெக்னிசியன் சாந்தி ஆகியோர் ரத்த சேகரிப்பு செய்தனர், இம்முகாமில் 30 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட முன்னால் மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், ம ம க நகர செயலாளர் கமால் ஹுசைன், நகர பொருளாளர் சபுருதீன், நகர துணை செயலாளர் புஹாரி, புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப், முன்னால் நிர்வாகி லெப்பை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பாதுக்காப்பு ஏற்பாடுகளை நகர காவல்துறை உதவி ஆய்வாளர் ராமசாமி தலைமையில்
காவல்துறையினர் செய்தனர்.
காவல்துறையினர் செய்தனர்.



