காரைக்கால் பகுதியின் பல்வேறு அவல நிலைகளை கண்டித்தும், புதுச்சேரி அரசின் காரைக்கால் புறக்கணிப்பை கண்டித்தும் காரைக்காலில் .... மனிதநேய மக்கள் கட்சியின்- கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த கால பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் பகுதிக்குரிய பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், தனியார் கல்வி கட்டண விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்வி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்கி வைக்க வேண்டும், சாலைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்தும், சாலைகளில் திரியும் நாய் மற்றும் மாடுகளை பிடிக்க வேண்டும். வருவது மழை காலமாக உள்ளதால், சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்து மழை நீர் சாலைகளில் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை அதே ஏழ்மை நிலையில் உள்ள மஞ்சள் நிற ரேசன் கார்டுக்கும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்த காரைக்காலிலேயே அதிகாரியை நியமிக்க வேண்டும், காரைக்கால் நகர பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாய்க்கால்கள், அரசு நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வீடுகள், நஞ்சை, புஞ்சைகளை பட்டா மாற்றம் செய்வதற்காக காரைக்கால் வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்த நூற்றுக்கணக்கான மனுக்கள் ஒரு வருடங்களுக்கு மேலாக பெயர் மாற்றம் செய்யப்படாமலும், நடவடிக்கை எடுக்கப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பட்டா மாற்றம் சம்பந்தமான மனு மீது நடவடிக்கை எடுக்க ஆயிர கணக்கிலும், லட்ச கணக்கிலும் பணம் கேட்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் முழு அக்கறை செலுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலைகளையும் புதுப்பிக்கவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நகர்களிலும் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும், காரைக்கால் - திருச்சி ரயிலின் ஒரு ரயிலான காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால் - திருச்சி ரயில் இயக்க வேண்டும், புதுத்துறை பாலம் இறக்கத்தில் உள்ள சாராயக்கடையை குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும், மார்க் துறைமுகத்தில் நிலக்கரிகளை இறக்க தடை விதிக்க வேண்டும்,காரைக்காலில் உள்ள போக்குவரத்து நெரிசலை முறைபடுத்த மேற்கு புறவழி சாலையை உடனடியாக அமைக்க வேண்டும்,காரைக்கால் பகுதி மக்களின் அலைச்சலை குறைக்கும் விதமாக காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே காரைக்கால் பகுதி மக்களும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும், மேலும் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதியுறும் நிலையில் மின் கட்டணத்துடன் கூடுதலாக பல்வேறு வகைகளில் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், உட்பட காரைக்கால் பகுதியின் பல்வேறு அவல நிலைகளை கண்டித்தும், புதுச்சேரி அரசின் காரைக்கால் புறக்கணிப்பை கண்டித்தும் காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்அப்துல் காசிம் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஷாஜஹான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது சர்புதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ஜியாவுதீன், S முஹம்மது ஜெக்கரியா, சதாம் ஹுசைன், நகர பொருளாளர் சபுருதீன், கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர், நகர நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது சுல்தான் செய்யது புஹாரி, நகர நிர்வாகிகள் முஹம்மது யூசுப், முஹம்மது பாசித், முஹம்மது ஹுசைன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், முடிவில் நகர செயலாளர் கமால் ஹுசைன் நன்றியுரை கூறினார்.



