அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, September 23, 2014

கல்வி நிலையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சி நேரில் மனு அளித்தனர்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் பிரிவான காரைக்கால் மாவட்ட மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் M.முஹம்மது ஷர்புதீன் அவர்கள் இன்று (23.9.2014) மாவட்ட ஆட்சியர் வல்லவன் அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது "அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 5 முதல்வர் பதவிகளில் காலியாக உள்ள 3 முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், காலியாக உள்ள விரிவுரையாளர்களுக்கு பதில் பட்டதாரி ஆசிரியர்கள் அந்த வகுப்புகளை கூடுதலாக எடுத்து வருகின்றனர், ஆகவே, காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும், அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 10 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள 70 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஆரம்ப நிலை பள்ளிகளில் உள்ள PPST பதவிகளை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட ஒய்வு பெற்ற விரிவுரையாளர்களை உடனே திருப்பி அனுப்பி விட்டு படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த இடங்களை வழங்க வேண்டும், அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதுபோல், "காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் கொம்யூன் சுரக்குடியிலிருந்து நல்லம்பல் வரை உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய பிறகு சுரக்குடியிலிருந்து வளத்தாமங்களம் வரை உள்ள மட்டுமே சாலை செப்பனிடப்பட்டுள்ளது, மீதமுள்ள வளத்தாமங்கலத்திளிருந்து நல்லம்பல் வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும், மேலும் காரைக்காலில் இருந்து கருக்கங்குடி  வழியாக அம்பகரத்தூருக்கு பேருந்து இயக்க வேண்டும்" என மனிதநேய மக்கள் கட்சியின் கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார், கோரிக்கையை உன்னிப்பாக  கவனித்த ஆட்சியர் அவர்கள் நேரில் வந்து இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் நைனா  முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள்  சாதிக் அலி, ஷாஜஹான், மாவட்ட முன்னாள் தொழிற்சங்க செயலாளர் இக்பால் ஆகியோர் உடனிருந்தனர். 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP