மனிதநேய மக்கள் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம் 2015 மே,
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என மனிதநேய மக்கள் கட்சி தலைமை
அறிவித்தது, அதன் தொடர்ச்சியாக மனிதநேய மக்கள் கட்சியின் தீவிர உறுப்பினர்
சேர்க்கை திட்டம் 2015 துவக்க விழா காரைக்காலில் மாவட்ட செயலாளர்
எம்.நெய்னா முஹம்மது தலைமையில் நடைபெற்றது, பொதுச் செயலாளர் எம். தமீமுன்
அன்சாரி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர், மாவட்ட பொருளாளர்
ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஷாஜஹான், மாவட்ட
நிர்வாக குழு உறுப்பினர் லியாக்கத் அலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர்
அக்பர்ஷா, மனிதநேய வர்த்தக சங்க மாவட்டசெயலாளர் அன்வர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் தாமாகவே முன்வந்து
உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை
இணைத்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முஹம்மது சர்புதீன் நன்றி
கூறினார். இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் முஹம்மது யாசின், நகர துணை
செயலாளர்கள் அன்சாரி, அன்வர் அலி, முஹம்மது சம்சுதீன், கருக்கன்குடி கிளை
செயலாளர் முஹம்மது மர்ஜுக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








