மனிதநேய மக்கள் கட்சி - காரைக்கால் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா காரைக்காலில் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது தலைமையில் நடைபெற்றது, பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஷாஜஹான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லியாக்கத் அலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அக்பர்ஷா, மனிதநேய வர்த்தக சங்க மாவட்டசெயலாளர் அன்வர், தொழிலதிபர் விழிதியூர் கருணாநிதி, நகர செயலாளர் முஹம்மது சர்புதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


