புதுச்சேரி மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தில் தகுதியானவர்களுக்கு கடன் உதவி கிடைப்பதில்லை
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கழகம் சிறப்பாக செயல்பட வாரிய தலைவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு பின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. தகுதியானவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை.
காரைக்கால் பகுதியில் இருந்து சிறுபான்மையினத்தை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறு கடனுதவிக்காக மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் செயல்பட்டு வருகிறது, இதனால் கடனுதவி கோரி மனு அளித்தவர்கள் காரைக்கால் மாவட்ட சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக அலுவலகத்தை அணுகினால், முறையான பதில் இல்லை. எனவே, புதுச்சேரி முதல் அமைச்சர் இவ்விசயத்தில் தலையிட்டு சாமானிய மக்களுக்கும் பயன் தரும் வகையில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் செயல்பட வழிவகுக்க வேண்டும்.
