அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, January 15, 2016


காரைக்காலிலுருந்து தென் மாவட்டம் மற்றும் சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
*******


புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் சென்ற 17.11.2011 அன்று ரயில்வே நிலையம் திறக்கப்பட்டது, காரைக்கால் ரயில்வே நிலையத்திலிருந்து சென்னை, எர்ணாகுளம், பெங்களூர், மும்பை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்வே நிலையம் முனையமாக இருப்பதாலும், திருநள்ளார் சனீஷ்வரபகவான் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளதால் தினந்தோறும் ஏராளமான மக்கள் காரைக்கால் ரயில்வே நிலையம் வழியாக வந்து செல்கின்றனர்.

தற்பொழுது, காரைக்காலிலுருந்து காலை 6 மணிக்கு ஒரு பாசஞ்சர் ரயில் திருச்சிக்கு செல்கின்றன, அதன்பிறகு திருச்சிக்கு மதியம் 12.15 மணிக்கு பாசஞ்சர் ரயில் செல்கின்றன, இந்த இடைப்பட்ட நேரத்தில் திருச்சிக்கு வேறு ரயில்கள் இல்லை. அதுபோல், காரைக்காலிலுருந்து தென் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. தினமும் காரைக்காலிலுருந்து சென்னைக்கு இரவு 8.45 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் செல்கின்றன. மேலும், காரைக்கால் முதல் பேரளம் வரை ரயில்வே பாதை அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை பாதை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, காரைக்கால் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டும், தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளிலுருந்து மும்மத தலங்களுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் காரைக்காலிலுந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 6 மணி முதல் மதியம் 12.15 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கவும், காரைக்கலிலுருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் வழியாக கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரத்திற்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும், காலை நேரத்தில் காரைக்காலிலுருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் அல்லது அதிவேக பாசஞ்சர் ரயில் இயக்கவும் எதிர்வரும் நாடாளுமன்ற ரயில்வே பட்ஜெட் உரையில் அறிவிப்பு செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு அவர்களுக்கும், புதுச்சேரி எம்.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதுபோல், காரைக்கால் முதல் பேரளம் வரை ரயில்வே பாதை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்து பல வருடங்கள் ஆகியும் இதுவரை பாதை அமைப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படாமல் உள்ளதாள், மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக ரயில்வே பாதை அமைக்க ஆவன செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளத

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP