அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, January 20, 2016

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி .... சென்னை - மதுரை - கோவையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தொடர்பாக .... காரைக்காலில் .... மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் .....

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் வாடும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட சிறைவாசிகளையும், அபூதாகிர் உள்ளிட்ட முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பிப்ரவரி 7 அன்று சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மாநகரங்களில் நடைபெறவுள்ள கோரிக்கை ஆர்ப்பாட்டம் தொடர்பான மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது, மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காரைக்கால், நாகை (வடக்கு), நாகை (தெற்கு), திருவாரூர், தஞ்சை (வடக்கு), தஞ்சை (தெற்கு), திருச்சி (வடக்கு)  ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காரை மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார், குவைத் மண்டல செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தார், தலைமை உயர்நிலை குழு தலைவர் ஜே.எஸ்.ரிபாயி சிறப்புரை ஆற்றினார், முடிவில் மாவட்ட பிரதிநிதியும், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் நன்றியுரை கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை உயர்நிலை குழு தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் "பிப்ரவரி மாத இறுதிக்குள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு மற்றும் தலைமை செயற்குழு கூடி வரும் 2016 ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி சம்பந்தமான முடிவுகளை அறிவிக்கும், காரைக்காலிலுந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 6 மணி முதல் மதியம் 12.15 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் ஒரு பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்,  காரைக்கலிலுருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரத்திற்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க  வேண்டும்,  காலை நேரத்தில் காரைக்காலிலுருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரயில் இயக்க  வேண்டும், காரைக்கால் முதல் பேரளம் வரை ரயில்வே பாதை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் புதுச்சேரி அரசும் நீர் நிலைகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை ரூ.4000 பணத்தை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் உண்மை நிலையை அறிய I.A.S அதிகாரி தலைமையில் ஒரு உண்மை நிலை அறியும் குழுவை அமைத்து, அந்த உண்மை நிலை அறியும் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிட்டு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மார்க் தனியார் துறைமுகத்தில் இறக்கி வைத்து அனுப்படும் நிலக்கரிகளின் துகள்கள் பறக்கவிடாமல் தடுக்கும் விதமாக அதன் மீது தண்ணீர் ஊற்றாமலும், வாகனம் மற்றும் ரயில் மூலமாக அனுப்பும்போது நிலக்கரிகளை மூடாமலும் அனுப்புவதால், நிலக்கரியின் துகள்கள் பறந்து அதனால் துறைமுகத்திலிருந்து 10



கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள மக்களுக்கு கேன்சர், நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர், எனவே, நிலக்கரிகளை பாதுக்காப்பான முறையில் இறக்கி வைக்க வேண்டும் அல்லது நிலக்கரி இறக்க தடை விதிக்க வேண்டும்" என கூறினார்.
இச்சந்திப்பின்போது மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் ஷாஜஹான், சாதிக் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் யூசுப்கான், நகர பொருளாளர் கமால் ஹுசைன், நகர செயலாளர் சர்புதீன், நகர துணை செயலாளர் புஹாரி, மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் ஹாஜா மெய்தீன், தொகுதி செயலாளர்கள் முஹம்மது இக்பால், முஹம்மது இப்ராஹிம், ஹாஜா மெய்தீன், நகர மற்றும் கிளை நிர்வாகிகள் முஹம்மது யூசுப், சாகுல் ஹமீது உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP