அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, February 21, 2016

பாஜக இடம்பெறும் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெறாது

பாஜக இடம்பெறும் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெறாது
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம் அவர்களின் இல்லத் திருமண விழாவிற்கு காரைக்காலுக்கு வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது " அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  தொடர் உண்ணாவிரத பட்டினி போராட்டத்தை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக நடத்தினார்கள், சென்ற வாரம் நான் அங்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தேன், நடந்து முடிந்த தமிழக இடைகால பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்கள், மேலும் அதற்கான நிர்வாக உத்திரவை பிறப்பிக்க வேண்டுமென எனது உரையில் தெரிவித்தேன், அதனை ஏற்று தமிழக அரசு நிர்வாக உத்தரவினை வெளியிட்டுள்ளது, அதற்காக தமிழக அரசுக்கும், தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

புது டெல்லியிலுள்ள இளைய சமுதாயத்திற்கான மதசார்பற்ற கொள்கைக்கான தொட்டிலாக விளங்கக்கூடிய ஜவஹர்லால் நேரு பலகலைக்கழக மாணவர்கள் மீது பாஜக, ஏபிவிபி உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றார்கள், ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு நரேந்திர மோடியுடைய ஆட்சியில் இடமில்லை என்பதைத்தான் இந்த நடவடிக்கைகள் காண்பிக்கின்றன. முதலிலே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலே, இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலே என்று அது நீடித்து வருகிறது. ஜனநாயக ரீதியில் கருத்தை தெரிவிக்கின்ற மாணவர்கள் மீது தேச விரோதிகள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி மாணவர்களை நசுக்கும் பணியினை நரேந்திர மோடியினுடைய மத்திய அரசு செய்து வருகின்றது இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் வளர்ச்சி என்ற பேரிலே பிரச்சாரம் செய்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அரசியல் செய்து வரும் பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும், பாஜக இடம்பெறும் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெறாது. மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பதை மிக விரைவில் தலைமை நிர்வாக குழு கூடி முடிவு அறிவிக்கும்.

சென்ற ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட காரைக்கால் - சீர்காழி ரயில்வே பாதை அமைக்கும் பணியினை மத்திய ரயில்வே அமைச்சகம் துரிதப்படுத்தவேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்" என கூறினார்.

இச்சந்திப்பின் போது தலைமை உயர்நிலை குழு உறுப்பினர் ஜே.எஸ்.ரிபாயி, மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட வணிகர் சங்க செயலாளர் முஹம்மது அன்வர், காரை தெற்கு தொகுதி செயலாளர் முஹம்மது இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கமால் ஹுசைன், சபுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP