அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, October 15, 2016

அக்டோபர் 18 காரைக்காலில் நடைபெறும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரி நீர் பிரச்னையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு துரோகம் செய்திட்ட மத்திய அரசைக் கண்டித்தும் அக்டோபர் 18 காரைக்காலில் நடைபெறும்  விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை :

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, தீடீர் என 03.10.2016 அன்று, மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கின்றது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தான் மத்திய அரசு 1990ல் நடுவர் மன்றம் அமைத்தது, 2007ஆம் ஆண்டு வெளிவந்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளிடாமல் அலட்சியப்படுத்திய மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தான் 2013ல் அரசிதழில் வெளியிட்டது. நடுவர் மன்றம் அமைக்கவும், அரசிதழில் வெளியிடவும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஏற்ற மத்திய அரசு தற்போது மட்டும் மறுப்பது ஏன்?

நடுநிலையோடு செயல்பட வேண்டிய மத்திய அரசு, பாரபட்சமாக கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எதிராகவும் மோடியின் மத்திய அரசு செயல்படுவது, தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தும். பிரிவினைவாதிகளை ஊக்கப்படுத்தும் பேரபாயம் கொண்டதாகும்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எதிராக, வஞ்சகம் நிறைந்த துரோகத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து, விவசாயிகள் கூட்டியக்கம் தீர்மானித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என அறிவித்ததின் அடிப்படையில் காரைக்காலில் விவசாயிகள் சங்கம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி வரும் 18 செவ்வாய்கிழமை காரைக்காலில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மறியல் போராட்டத்திலும் கலந்து கொள்ளும் என அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.


ஒப்பம்

B.ஷாஜஹான்
மாவட்ட செயலாளர்

 


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP