முஹர்ரம் பண்டிகை தினத்தை புதுச்சேரி அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்
முஹர்ரம் பண்டிகை தினத்தை புதுச்சேரி அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்
முதல் அமைச்சருக்கு - தமுமுக கோரிக்கை
+++++++++++++++++++++++++++++++++++++
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் அலாவுதீன் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
+++++++++++++++++++++++++++++++++++++
இஸ்லாமியர்களின் வருடப்பிறப்பான முஹர்ரம் மாதத்தின் 10வது நாளான 12.10.2016 அன்று மத்திய அரசும், தமிழக அரசும் பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு முஹர்ரம் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்காமல் அன்றைய தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினமாக (Restricted Holiday) அறிவித்து உள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் பிறை கணக்கின் அடிப்படையிலேயே அமைவதால் வரும் 12.10.2016 அன்றுதான் முஹர்ரம் மாதத்தின் 10 வது நாள் வருகிறது.
ஆகவே, மத்திய மற்றும் தமிழக அரசுகள் அறிவித்திருப்பது போலவும் மற்றும் கடந்த வருடங்களில் அறிவித்ததுபோல் முஹர்ரம் தினத்தை அரசு பொது விடுமுறை தினமாக புதுச்சேரி அரசு அறிவிக்க வேண்டுமெனவும், மேலும் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள 13.10.2016 ம் தினத்தை மாற்றி பிறை கணக்கின்படி முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான 12.10.2016 புதன்கிழமை அன்று விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
ஒப்பம்
M.S.அலாவுதீன்
மாநில செயலாளர்