அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, September 16, 2016

காரைக்காலில் - மனிதநேய மக்கள் கட்சி மறியல் போராட்டம்.

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்து

காரைக்காலில் - மனிதநேய மக்கள் கட்சி மறியல் போராட்டம்.

--------------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும், தனிநபர் தாக்குதல்கள் தொடங்கி வணிக நிறுவனங்கள், தமிழக பதிவெண் கொண்ட பேரூந்துகள், லாரிகள், கார்கள் முதலிய வாகனங்களும் எரிக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. கலவரக்காரர்களை கட்டுப்படுத்தி தமிழர்களின் வாழ்வுரிமை காக்க கர்நாடக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு இரு மாநிலங்களுக்குமிடையே நடைபெறும் இந்த பிரச்னையை கண் மூடி வேடிக்கை பார்க்கும் கையாலாகாதனத்தை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், சொத்துகளை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ....

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா மெய்தீன், அக்பர்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாவட்ட செயலாளர் முஹம்மது அன்வர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சர்புதீன், தொகுதி செயலாளர்கள் இக்பால், முஹம்மது இப்ராஹீம், ஹாஜா மெய்தீன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், நகர செயலாளர் மாசிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP