அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, October 21, 2016

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக காரைக்காலில் ...... தமுமுக .... கையெழுத்து இயக்கம் துவக்கம்

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக
காரைக்காலில் ...... தமுமுக .... கையெழுத்து இயக்கம்  துவக்கம்
+++++++++++++++++++++++++++++++++++++++++

இந்திய அரசியலமைப்பு சட்டத்தி 25 ஆம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை  அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் தத்தமது தனியார் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர்.  ஆனால்,ஆர்.எஸ்.எஸ்  மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக நீண்ட காலமாக பொதுசிவில் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளது.

அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய சட்ட ஆணையம் வாயிலாக "பொதுமக்களின் கருத்தரிய" என்று சொல்லி 16 கேள்விகள் கொண்ட ஒரு வினா பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலுள்ள ஒரேயொரு கேள்வியை தவிர ஏனைய கேள்விகள் அனைத்தும் குதர்க்கம் நிறைந்தவையாக உள்ளது. இந்தியாவின் சிறுபான்மை சமூகம் உட்பட அனைத்து மக்களையும் பாதிக்கும் இந்த சட்ட ஆணையத்தின் வினா பட்டியலை முற்றிலும் புறக்கணிக்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கேட்டு கொண்டுள்ளதோடு, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மோடி அரசை கண்டித்தும், உச்சநீதிமன்றத்திற்கு சட்ட ரீதியாக உணர்த்துவதற்கும் நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களும் கையெழுத்திடும் 'கையெழுத்து இயக்கத்தை" நாடு முழுவதும்  நடத்தி வருகின்றது.

கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காரைக்காலில் தமுமுக நகர செயலாளர் கமால் ஹுசைன் தலைமையில் காரைக்கால் பெரியபள்ளிவாசலில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல்  ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப் எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். கையெழுத்து படிவத்தில் முஸ்லிம் ஆண்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். பின்னர் வீடு வீடாக சென்று முஸ்லிம் பெண்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் காசிம், யூசுப்கான், மெய்தீன், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மமக மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, அக்பர்ஷா, மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் நாசர், சதாம் ஹுசைன், நகர துணை செயலாளர்  புஹாரி, தஜ்மல்தீன் உடன்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP