காரைக்காலில் .... தமுமுகவிற்கு ரத்ததான விருது
தேசிய தன்னார்வ ரத்த தான நிறைவு நாள் விழா காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு ரத்ததான விருதினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுகவிற்கு ரத்ததானம் செய்ததற்கான விருது வழங்கப்பட்டது. விருதுகளை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தமுமுகவின் ரத்ததான பணிகளை விளக்கி பேசினார்.


