ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காரைக்காலில் நடைமுறைப்படுத்தக்கூடாது ....... புதுச்சேரி அமைச்சர்களிடம் மனிதநேய மக்கள் கட்சி நேரில் வலியுறுத்தல் ....
புதுச்சேரி
- காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய
அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன்
எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல் அமைச்சர் நாராயணசாமி
அவர்களும், புதுச்சேரி அரசுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே இத்திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களும் குற்றம்
சாட்டியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் சமூக நல அமைச்சர் கந்தசாமி ஆகியோர்களை மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர்ஷா, ஹாஜா மெய்தீன், மனிதநேய வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அன்வர், காரை வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அம்மனுவில் கூறியிருப்பதாவது :
"ஹைட்ரோ கார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதும், உட்கொள்ளுவதும் மிகவும் ஆபத்தானது. இவை புற்றுநோயை உருவாக்கும். மேலும் சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஆபத்தான இந்த திட்டத்திற்கு மத்திய அனுமதி அரசு பாதிக்கப்படும் மக்களிடம் கருத்து கேட்காமல் அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களால் மீத்தேன் திட்டம் விரட்டியடிக்கப்பட்டது. தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டம் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் நாசகரமான திட்டத்தை தனியார் நிறுவனங்களின் மூலம் மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புகுத்த நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் இந்த திட்டத்தால் ஏற்கெனவே வறட்சியாலும், சரியான நீர் ஆதாரம் இல்லாமலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் விவசாயம் முற்றிலுமாக அழியும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
எனவே, காரைக்கால் மக்களின் நலனுக்கு விரோதமாக மோடி அரசு அனுமதி அளித்துள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.