திருநள்ளாரில் வாரசந்தை அமைத்ததற்கு .... அமைச்சர் கமலக்கண்ணனுக்கு ... மனிதநேய மக்கள் கட்சி நன்றி
மனிதநேய
மக்கள் கட்சியின் திருநள்ளார் கிளை பொதுக்குழு கூட்டம் கிளை செயலாளர் ராஜா
முஹம்மது தலைமையில் நடைபெற்றது, கிளை பொருளாளர் ஜாஹிர் ஹுசைன் வரவேற்புரை
நிகழ்த்தினார், மாநில செயலாளர் அலாவுதீன், மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட
துணை செயலாளர் ஹாஜா மெய்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து
கொண்டு உறுப்பினர்களுக்கு மமக உறுப்பினர் அட்டைகளை வழங்கினர், கிளை துணை
செயலாளர்கள் ஷேக் முஹம்மது, பஷீர் அஹமது, அக்பர் அலி, கிளை இளைஞர் அணி
செயலாளர் ஹாஜா நஜ்முதீன், கிளை மனிதநேய தொழிற்சங்க செயலாளர் அலாவுதீன்
உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் பல்வேறு
தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
1. திருநள்ளார் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், மக்களின் அலைச்சலை தவிர்க்கவும் திருநள்ளாரில் வியாக்கிழமை தோறும் வாரசந்தை அமைக்க ஏற்பாடு செய்த மாண்புமிகு வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களுக்கும், புதுச்சேரி அரசுக்கும், அமைத்து கொடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
2. திருநள்ளாரிலிருந்து அத்திப்படுகை மற்றும் நெய்வாச்சேரி செல்லும் சாலைகள் செப்பனிடப்பட்டு பல வருடங்கள் ஆவதால், அச்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் வாகனத்தில் செல்வோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அச்சாலைகளை சீரமைக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
3. திருநள்ளார் பள்ளிவாசல் அருகிலிருந்து கடைத்தெரு வரை உள்ள நூலாறு சின்ன வாய்க்கால் குப்பைகளால் முழுவதும் அடைக்கப்பட்டு புதர்கள் மண்டி கிடப்பதால் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது, இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, உரிய நடவடிக்கை எடுத்து நூலாறு வாய்க்காலை சுத்தம் செய்து புதர்களை அப்புறப்படுத்தி தருமாறு புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.