காரைக்காலில் நடைபெற்ற திமுக உண்ணாவிரத போராட்டத்தில் மமக
தமிழக சட்டசபையில் கடந்த 18.02.2017 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (22.02.2017) காரைக்காலில் மாநில அமைப்பாளர் A.M.H.நாஜிம் தலைமையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர்ஷா, ஹாஜா மெய்தீன், வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இப்ராஹிம், தெற்கு தொகுதி செயலாளர் இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் முஹம்மது ரியாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை எடுத்துரைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை எடுத்துரைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.


