ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காரைக்காலில் மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
புதுச்சேரி - காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களும், புதுச்சேரி அரசுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் மமக தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், மாநில செயலாளர் அலாவுதீன் ஆகியோரின் ஆலோசனையின்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி மற்றும் ஹாஜா மெய்தீன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அம்மனுவில் கூறியிருப்பதாவது :
"ஹைட்ரோ கார்பன்" எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே மத்திய அரசு 'ஜெம் லெபாரட்டரீஸ்' என்னும் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும்.'
ஹைட்ரோ கார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதும், உட்கொள்ளுவதும் மிகவும் ஆபத்தானது. இவை புற்றுநோயை உருவாக்கும். மேலும் சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஆபத்தான இந்த திட்டத்திற்கு மத்திய அனுமதி அரசு பாதிக்கப்படும் மக்களிடம் கருத்து கேட்காமல் அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களால் மீத்தேன் திட்டம் விரட்டியடிக்கப்பட்டது. தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டம் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் நாசகரமான திட்டத்தை தனியார் நிறுவனங்களின் மூலம் மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புகுத்த நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் இந்த திட்டத்தால் ஏற்கெனவே வறட்சியாலும், சரியான நீர் ஆதாரம் இல்லாமலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் விவசாயம் முற்றிலுமாக அழியும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
காரைக்கால் மக்களின் நலனுக்கு விரோதமாக மோடி அரசு அனுமதி அளித்துள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும், அதையும் மீறி இத்திட்டத்தை நடைப்பமுறப்படுத்த மத்திய பாஜக அரசு முனையுமானால் பொதுமக்களையும், மாணவர்களையும், விவசாயிகளையும் திரட்டி மிக பெரிய அளவில் காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம்.
அன்புடன் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!