ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி .... காரைக்காலில் ... மனிதநேய மக்கள் கட்சி மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
இப்பிரச்சார கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முஹம்மது யாசின், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், யூசுப்கான், கமால் ஹுசைன், தெற்கு தொகுதி செயலாளர் இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், நகர செயலாளர் முஹம்மது மாசிம், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், ஊடக பிரிவு மாவட்ட அணி செயலாளர் முஹம்மது நஜிமுதீன், சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் முஹம்மது ரியாஸ், சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர் சமீர், நகர துணை செயலாளர் முஹம்மது யூசுப், திருநள்ளார் கிளை செயலாளர் ராஜா முஹம்மது, அம்பை பாசில், கோட்டுச்சேரி கிளை செயலாளர் முத்து, கிழக்கு கிளை செயலாளர் அப்துல் ரஹ்மான் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ஷாஜஹான் "ஹைட்ரோ கார்பன் எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க காரைக்கால் பகுதி மக்களுடைய
ஒப்புதல் இல்லாமலே மத்திய பா.ஜ.க அரசு ‘ஜெம் லெபாரட்டரீஸ்’ என்னும் நிறுவனத்திற்கு
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் ஆய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும்
கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும்.'
ஹைட்ரோ கார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதும், உட்கொள்ளுவதும் மிகவும் ஆபத்தானது. இவை புற்றுநோயை உருவாக்கும். மேலும் சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் நாசகரமான திட்ட மாகும். இந்த திட்டத்தால் ஏற்கெனவே வறட்சியாலும், காவிரி நீர் வராததால் சரியான நீர் ஆதாரம் இல்லாமலும், மழை இல்லாமலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் விவசாயம் முற்றிலுமாக அழியும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
காரைக்கால் மக்களின் நலனுக்கு விரோதமாக மோடி அரசு அனுமதி அளித்துள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள புதுச்சேரி அரசுக்கு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்.
அதையும் மீறி, இத்திட்டத்தை நடைப்பமுறப்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முனையுமானால் மக்களையும், எதிர்கால சந்ததிகளையும், மண்ணையும், காப்பாற்ற பொதுமக்களையும், மாணவர்களையும், விவசாயிகளையும் திரட்டி மிக பெரிய அளவில் காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறினார்.