உணவு பங்கீட்டு அட்டையில் ஆதார் இணைக்க
மக்களை அலைக்கழிக்கும் காரைக்கால் குடிமை பொருள் வழங்கல் துறை
மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட மக்களின் உணவு பங்கீட்டு அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் மூலம் விடப்பட்ட அறிவிப்பினை அடுத்து காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை அணுகுவதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூடுவதால், கூட்டம் நெரிசலில் சிக்கி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஏற்கனவே, இருமுறை ரேஷன் கடைகள் மூலம் மக்களை அலையவிட்டு ஆதார் அட்டையின் நகலை பெற்ற குடிமைப் பொருள் வழங்கல் துறை அந்த ஆதார் நகல்களை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மக்களை அலைக்கழிக்கும் விதமாக ஆதார் அட்டையை கோரும் குடிமைப் பொருள் வழங்கல் துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் பார்த்திபன் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மக்களை அலைக்கழிக்காமல் ஒவ்வொரு கொம்யூனாக சென்று அங்கு மக்களை வரவழைத்து ஆதாரை பதிய வேண்டுமென்றும், வெயில் காலமாக உள்ளதால் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர், அதனை தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் துறை இணை இயக்குநர் கீதா அவர்களையம் சந்தித்தனர்.
பின்னர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய கீதா அவர்கள் "புதுச்சேரியிலிருந்து நிக் துறை மூலம் கொடுக்கப்பட்டுள்ள கம்யூட்டர் புரோகிராம் படி காரைக்காலில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் மட்டுமே பதிய முடியும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை அறிவித்து அந்த பகுதிக்கு மட்டுமே பதியப்படுகிறது என்றும், ஆர்வமிகுதியால் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூடி விடுகிறார்கள் என்றும் தெரிவித்ததுடன், மக்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கும் தேதிகளில் அந்த பகுதி மக்கள் மட்டுமே வந்து பதிய வருமாறு கோரிக்கை விடுத்தார்.

இச்சந்திப்பின்போது மாவட்ட
பொருளாளர் ராஜா முஹம்மது , மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர்ஷா, ஹாஜா
மெய்தீன், தமுமுக மாவட்ட துணை செயலாளர் மெய்தீன்,இளைஞரணி மாவட்ட செயலாளர்
சர்புதீன், வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இப்ராஹிம், தெற்கு தொகுதி
செயலாளர் இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், தமுமுக நகர
செயலாளர் கமால் ஹீசைன். மமக நகர துணை செயலாளர் முஹம்மது யூசுப், தமுமுக நகர
துணை செயலாளர் புஹாரி உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.