அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, May 29, 2017

மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளை இறைச்சிக்காக விற்க தடைச் செய்துள்ள மத்திய பாஜக அரசின் தடை சட்டத்தை கண்டித்து

காரைக்காலில் .... தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார், மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.







 ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் நாஜிம், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசு வணங்காமுடி, மா.கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், தி.க  மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் முஹம்மது பிலால், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சோழசிங்கராயர், சமீர், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் SDPI  கௌஸ், உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

 ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது ஆசிக், முஹம்மது மாசிம், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், ஊடக துறை மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், தொண்டரணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மனிதநேய வணிகர் சங்க மாவட்ட செயலாளர் முஹம்மது மாஹின், நகர பொருளாளர் முஹம்மது சிக்கந்தர் உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் நன்றி கூறினார்









Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP