திருப்பட்டினம் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்டம், திரு-பட்டினம் கிளை சார்பாக பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொகுதி செயலாளர் முஹம்மது ஆஷிக் தலைமையில், இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், கிளை செயலாளர் முஹம்மது தாரிக், தமுமுக கிளை பொருளாளர் அபூபக்கர் உட்பட நிர்வாகிகள் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது "திருப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் 2013ல் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தாத ஹைமாஸ் விளக்கை வருகிற நோன்பு காலத்திற்கு முன்பாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு ஒரு மாத காலத்திற்கு விடியற்காலை 3.30 am சஹர் செய்ய ஏதுவாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும், திரு. பட்டிணம் கொம்யூன் பஞ்சாயத்து முதல் திரு.பட்டினம் பாலம் வரை உள்ள சாக்கடையை தூர்வாரி சாலையின் இருபுறமும் முறையான அமைப்புடன் சாக்கடையை அமைக்க வேண்டும், மேலும் காந்தி சாலை , மதரஸா பள்ளி தெரு சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை குறித்த நேரத்தில் எடுக்க ஆவணம் செய்ய வேண்டும், திரு. பட்டிணம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான அனைத்து உட்புற சாலைகளிலும் சாக்கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"

