தமுமுகவின் - ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் வெளியிடும் ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்து செய்தி
++++++++++++++++++++
ஈதுல் பித்ர் என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஒரு மாதம் முழுவதும் பசித்திருந்து, தாகித்திருந்து, ஏழை எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து, ஜகாத் என்னும் பொருளாதாரத்தை இல்லாதோருக்கு வாரி வழங்கி, ஏக இறைவனை வணங்கி வாழ்ந்து, எல்லோரோடும் இணங்கி வாழ்வது போன்ற இஸ்லாமிய வாழ்வியலை கற்றுத் தரும் மாதமே ரமலான் ஆகும். ரமலானில் பெற்ற இந்த ஆன்மீக பயிற்சிகளை ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்த உறுதி எடுத்துக் கொள்வோமாக. நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகைப் பெருநாளில் இதயங்களினது வாழ்த்துகிறோம். இந்திய நாட்டின் இறையாண்மை, தனித்தன்மை, சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை போன்ற வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் மக்களை பிளவுபடுத்தத் தூண்டும் தீய சக்திகளிடமிருந்து நாட்டையும் வீட்டையும் காக்க உறுதி ஏற்போம். அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் (பெருநாள்) நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எம்.எஸ்.அலாவுதீன்
புதுச்சேரி மாநில செயலாளர் - தமுமுக