ரம்ஜான் பெருநாள் பண்டிகைக்கு முன் கூட்டியே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், லைலத்துல் கதர் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினத்தை 23.06.2017 ஆக மாற்றவும் வேண்டும்
புதுச்சேரி அரசுக்கு தமுமுக கோரிக்கை
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

+++++++
தீபாவளி, ரம்ஜான் பெருநாள், கிறிஸ்துமஸ், ஹஜ் பெருநாள் உட்பட முக்கிய மத பண்டிகைகள் 21 ந் தேதிக்கு பிறகு வந்தால் அந்த மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு 20 மற்றும் அதற்கு பிறகு உள்ள தேதிகளில் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படுவது என்பது சட்டம். அதுபோலவே இதுவரை பண்டிகைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காலங்காலமாக நடைபெறும் வருகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இந்த ஆண்டு வரும் ஜூன் 26 ந் தேதி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால், சட்டவிதிகளின்படி அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அனால், இதுவரை அதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
அதுபோல், இஸ்லாமியர்களின் பண்டிகைகள் அனைத்து சந்திரனை கொண்டே கணிக்கப்படுகிறது, சந்திரனை கொண்டு கணிக்கப்படுவதால் ஆங்கில தேதியில் சரியாக கணக்கிட முடியாது. அதனால்தான் அரசு விடுமுறை அறிவிக்கும்போது இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கு மட்டும் தேதியை குறிப்பிட்டு விட்டு, சந்திரனின் காலத்திற்கேற்ப தேதி மாறுபடும் எனவும் அரசால் அறிவிக்கப்படும். அந்த அடிப்படையில் இவ்வருடம் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினமான லைலத்துல் கத்ர் தினம் வரும் 22.06.2017 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லைலத்துல் கத்ர் தினம் வரும் 23.06.2017 அன்று வருகிறது.
ஆகவே, தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்கவும், அதுபோல் லைலத்துல் கத்ர் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினத்தை வரும் 23.06.2017 என்று அறிவிக்க வேண்டுமெனவும் அன்புடன் கேட்டு கொள்கிறோம்.