அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, November 28, 2010

காரைக்காலில் - த.மு.மு.க வின் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமணை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் காரைக்கால் மு.வி.ச உயர் நிலைப்பள்ளியில் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமணை டீன் டாக்டர் K.R.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.


முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் த.மு.மு.க மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் M.முஹம்மது ஜியாவுதீன் வரவேற்றார். மாவட்ட தலைவர் A.லியாகத் அலி , மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் A.M.H.நாஜிம், துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) S.ஆபெல் ரொசாரியோ, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S.T.ஆரிபு மரைக்காயர், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் K.A.U.அசனா, சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் Y.இஸ்மாயில் ,நகரமன்ற உறுப்பினர் A.அப்துல் காதர், T.முஹம்மது ஜாஹிர் ஹுசேன் , S.M. ஷேக் இஸ்மாயில் லெப்பை , A.ஹாஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இம் முகாமில் குழந்தை நலம் மருத்துவம், தாய் சேய் நலம் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், கண் மருத்துவம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவம் உட்பட 9 பிரிவுகளை சேர்ந்த 35 மத்துவர்கள் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இம் முகாமில் கந்து கொண்டு சிறப்பித்த விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமணை டீன் டாக்டர் K. R. சீனிவாசன் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் S.ஆபெல் ரொசாரியோ ஆகிய இருவருக்கும் நினைவு பரிசாக திருக்குர்ஆனை த.மு.மு.க மாநில செயற்குழு உறுப்பினர் M.ஷேக் அலாவுதீன் வழங்கினார். நினைவு பரிசை பெற்றுக்கொண்ட துணை மாவட்ட ஆட்சியர் S.ஆபெல் ரொசாரியோ அவர்கள் "மனிதன் கடவுளுக்கு செய்யும் பணிவிடையை விட மனிதர்களுக்கு செய்யும் பணிவிடைகள்தான் சிறப்பானவை, அச்செயல்களை செய்யும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தையும் அதன் தொண்டர்களையும் நான் மனமாற பாராட்டுகிறேன் மேலும் உங்களின் பொதுபனிகளை மென்மேலும் செய்வதற்கு வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் அப்பணிகளுக்கு உங்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய காத்திருக்கிறேன்" என்று கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க நகர செயலாளர் M.முஹம்மது நஜிமுதீன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான் , மாவட்ட துணை செயலாளர் K.மெய்தீன் மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அகமது , மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் E.M.சபுருதீன் , மாவட்ட தொண்டர் அணி செயலாளர் H.அப்துல் காசிம் , காரை நகர துணை தலைவர் G.சாஹுல் ஹமீது, காரை நகர மாணவரணி செயலாளர் S.முஹமது ஜாஹிதீன் , ம.ம.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் M.நெய்னா முகமது, ம.ம.க மாவட்ட தொழிற்ச் சங்க செயலாளர் H.M.இக்பால், ம.ம.க முன்னால் துணை செயலாளர் அம்புரோஸ் அருள்ராஜ் , காரை நகர துணை செயலாளர் M.முஹம்மது சர்புதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் நகர தலைவர் H. முஹம்மது சிக்கந்தர் நன்றி கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP