பாபர் மஸ்ஜிதை இடித்த 68 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி த.மு.மு.க - தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 உடன் முடிவடைகின்றது. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 , 1992 அன்று பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி காற்றில் பரக்கவிட்டதுடன் மட்டுமல்லாமல் பாபர் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளும் சுதந்திரமாக உலா வருகின்றாகள். பாபர் பள்ளிவாசல் யாருக்கு சொந்தம் என்பது குறித்த சொத்து வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு கடந்த செப்டம்பர் 30 அன்று வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அநீதியான தீர்ப்பாக அமைந்துள்ளது. இச்சுழலில்
1. பாபர் பள்ளிவாசல் இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று நீதிபதி லிப்ரான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 குற்றவாளிகள் மீது நடவடிக்கைக் கோரியும்.
2. பாபர் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பாக ரேபேரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க கோரியும்.
3. பாபர் பள்ளிவாசல் சொத்து தொடர்பான அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்க கோரியும்.
டிசம்பர் 6 இன்று தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் A.லியாகத் அலி, மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் A.முகமது தாரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S.T.ஆரிபு மரைக்கார், கழக பேச்சாளர் M.ஹாஜி அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் பொன்.செந்தமிழ் செல்வன், மாநில செயலாளர் நகு.செல்வசுந்தரம், A.I.T.U.C. மாவட்ட செயலாளர் P.மதியழகன், C.P.I (M .L) மாநில குழு உறுப்பினர் A.ஜெயபால், மக்கள் கண்காணிப்பகம் மண்டல சட்ட ஆலோசகர் கு. காளிதாசன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் அ.ஜோசப் குணாளன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொது செயலாளர் J.முஹம்மது பிலால், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் ஆதி செல்லையா, விடுதலை மக்கள் பண்பாட்டு இயக்க மாநில செயலாளர் மணவாளன் ஆகியோரும் பங்கு கொண்டு கண்டன உரையாற்றி தங்கள் ஆதரவு முழக்கத்தை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் K .மொய்தீன் நன்றி கூறினார்.
இந்த தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் ம.ம.க மாவட்ட துணை செயலாளர் A .அப்துல் நாசர் மற்றும் M .A . ஹாஜா நஜிமுதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் M.நெய்னா முகமது, மாவட்ட தொழிற்ச் சங்க செயலாளர் H.M.இக்பால், மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அகமது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் M.முஹம்மது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் E.M.சபுருதீன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் H.அப்துல் காசிம், நகர தலைவர் H.முஹம்மது சிக்கந்தர், நகர செயலாளர் M.முஹம்மது நஜிமுதீன், நகர பொருளாளர் H.ஹசனுதீன், ம.ம.க நகர செயலாளர் A.அக்பர் ஷா, நகர துணை தலைவர் G.சாகுல் ஹமீது, நகர துணை செயலாளர் M.முஹமது சர்புதீன், S.முஹமது யாசின், கிளை தலைவர் J.ஹாஜா சேக் அலாவுதீன், B.தஸ்தகிர், M.பஷீர் அகமது, A.சுல்தான் ஆரிப், A.அப்துல் காதர், கிளை செயலாளர்கள் J.பாவா பஹ்ருதீன் ,M.முஹமது சபியுதின், M.சாதிக் அலி, N.அப்துல் காதர், A.ஷேக் முஹமது, ஆகியோர் உட்பட நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர்.



