காரைக்கால் பகுதியில் பழுதடைந்த பாலங்களுக்கு பதில் புதிய பாலங்கள் கட்டக்கோரி
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் - திருமலைராயன்பட்டினத்தை இணைக்கும் திருமலைராஜனாறு பாலம், காரைக்கால் - திருநள்ளாரை இணைக்கும் களையங்கட்டி மதகு பாலம், காரைக்கால் - புதுத்துறையை இணைக்கும் லெமேர் வீதி பாலம் ஆகியவைகள் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளை கடந்த பாலம் பளுதடைந்த நிலையில் எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளதால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சென்ற 13-10-2004 அன்று நடத்திய மாவட்ட பொதுக்குழுவில் மேற்கண்ட 3 பாலங்களுக்கு பதில் புதிய பாலங்கள் கட்டக்கோரி தீர்மானம் நிறைவேற்றி புதுச்சேரி அரசுக்கு அனுப்பியது. அதன் பிறகு பலமுறை பாலம் சம்பந்தமாக அரசுக்கு கடிதமும் மற்றும் போராட்டம் நடத்தியும் வந்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசின் அலட்சிய போக்கினாலும். மக்களை பற்றிய சிந்தனை இல்லாததாலும் பாலங்கள் சம்பந்தமாக அவ்வப்போது அரசு சார்பாக அறிக்கைகள் மட்டும் விடப்பட்டு வந்த நிலையில் சென்ற 31-12-2010 அன்று இரவு 7 மணிக்கு திருமலைராஜனாறு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி பாலத்தின் மீது போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அலட்சிய போக்கை கண்டித்து, போர்க்கால அடிப்படையில் திருமலைராஜனாறு பாலத்தின் மீது ராணுவ பாலம் அமைத்து தற்காலிகமாக போக்குவரத்து தடையின்றி செல்லவும், மேலும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள திருமலைராஜனாறு பாலம், களையங்கட்டி மதகு பாலம், புதுத்துறை பாலம், ஆகியவற்றுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முற்றுகை ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல் ரொசாரியோ அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் A.லியாகத் அலி தலைமை வகித்தார், மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் A.முஹம்மது தாரிக், K.மைய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உலமா அணி செயலாளர் S.P.முஹம்மது யூசுப், மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்காயர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முற்றுகை ஆர்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அஹமது , மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் M. முஹம்மது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் சேவை அணி செயலாளர் E.M.சபுருதீன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் H.அப்துல் காசிம், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் H.M.இக்பால், நகர தலைவர் H.முஹம்மது சிக்கந்தர், நகர செயலாளர் M. முஹம்மது நஜிமுதீன், நகர துணை செயலாளர் M.முஹம்மது சர்புதீன், கிளை தலைவர் S.H. நஜிமுதீன், M.பஷீர்அஹமது, கிளை செயலாளர்கள் J.ஹாஜா ஷேக் அலாவுதீன், M.சாதிக் அலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் H.ஹசனுதீன் நன்றி கூறினார்.