போலீஸ் துறையில் சேருவதற்கான பயிற்சி வகுப்பில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு காரைக்காலில் த.மு.மு.கவினர் பயிற்சி முகாமை முற்றுகை.
புதுச்சேரி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர், போலிஸ்காரர், ஊர்காவல்படை வீரர் காலி பணியிடங்களுக்கு நடைபெற உள்ள எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பினை காரைக்கால் மாவட்ட
நிர்வாகமும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்த உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 100 நபர்களை தேர்வு செய்வதற்கான முன்மாதிரி தேர்வு சென்ற 5 -1 -2011 அன்று நடத்தப்பட்டது. இதற்காக காரைக்கால் மாவட்டத்திலிருந்து 900 பேர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில் இருந்து மதிப்பெண் மற்றும் இடஒதிக்கிடு அடிபடையில் 100 நபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 100 நபர்களின் பட்டியல் இன்று (7-1-2011) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டு அந்த 100 நபர்களுக்கும் இன்று முதல் பயிற்சி அளிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் பலர் முன்மாதிரி தேர்வை எழுதி இருந்தும், வெளியிடப்பட்ட பட்டியலில் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு புதுச்சேரி அரசு அறிவித்துள்ள 2 சதவித இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் விதமாக முஸ்லிம்களுக்குரிய இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் முஸ்லிம்களை பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யாமல் முற்றிலுமாக புறக்கனிள்ளனர். இச்செய்தியை கேள்விபட்ட த.மு.மு.க வினர் மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற உள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முன்பு மாலை 5 மணிக்கு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகை செய்தி கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகம் அவர்கள் முற்றுகை தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.
தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் பயிற்சி முகாமை துவக்கி வைக்க வருகை தந்த மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆபெல் ரொசாரியோ, மாவட்ட வேலைவாயிப்பு அதிகாரி கீதா ஆகியோர் த.மு.மு.க வினரிடம் பேச்சிவார்த்தை நடத்தினர். பேச்சிவார்த்தையில் பயிற்சி வகுப்பில் உரிய முறையில் முஸ்லிம்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் முற்றுகை விளக்கப்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்காயர், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் M.முஹம்மது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், மாவட்டதொண்டரணி செயலாளர் H.அப்துல் காசிம், முன்னால் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், நகர தலைவர் H.முஹமது சிகந்தர், நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், நிர்வாகிகள் ஷேக் இஸ்மாயில் லெப்பை, அப்துல் காதர், KIPP இமாம் ஹாஜி அலி பிர்தவ்சி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.