காரைக்காலில் - த.மு.மு.க வின் இரத்ததான முகாம்
காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் காரைக்கால் த.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் H.முஹம்மது சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் மாநில செயற்குழு உறுப்பினர் M.ஷேக்அலாவுதீன்,மாவட்ட செயலாளர் I. அப்துர் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்காயர், KIPP செயலாளர் யூசுப், KIPP பொருளாளர் S.M.ஷேக் இஸ்மாயில் லெப்பை, KIPP இமாம் ஹாஜி அலி, T.முஹம்மது ஜாஹிர் ஹுசைன், A.ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் A.M.H.நாஜீம், அரசு அரசு பொது மருத்துவமணை கண்காணிப்பாளர் Dr..M.கந்தசாமி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி Dr.உதய குமார், இரத்தவங்கி மருத்துவ அதிகாரி Dr.P.நாராயணசாமி, தே.மு.தி.க மாவட்ட செயலாளர் K.A.U.அசான, நகரமன்ற உறுப்பினர் மும்தாஜ் ரஹ்மான், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க நகர செயலாளர் M.முஹம்மது நஜிமுதீன் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அகமது, மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், காரை நகர துணை தலைவர் G.சாஹுல் ஹமீது, காரை நகர துணை செயலாளர் M.முஹம்மதுசர்புதீன், மற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இம்முகமாயில் த.மு.மு.க உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.