அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, February 14, 2011

காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை நடத்திய இயற்கை மார்க்கம் இஸ்லாம் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கண்காணிப்பில் செயல்படும் காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியில் இயற்கை மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தலைவர் A.யூசுப் தலைமை வகித்தார், செயலாளர் Y.யுசுப்சா மரைக்கார் வரவேற்புரை நிகழ்த்தினார், K.I.P.P  செயற்குழு உறுப்பினர் M.ஷேக் அலாவுதீன், பொருளாளர் M.ஷேக் இஸ்மாயில் லெப்பை, முன்னால் செயலாளர் A.யாசுபுதீன், T.முஹம்மது ஜாஹீர் ஹுசேன், Z.முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், K.I.P.P இமாம் M.ஹாஜி அலி பிர்தவுஸி அறிமுக உறை நிகழ்த்தினார். பேராசிரியர் முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் "திரைப்பட நடிகராகவும், நாத்தீக சிந்தனை உடையவராகவும் இருந்து வந்த பெரியார்தாசனாகிய தான் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, தான் ஏற்றுக் கொண்ட தூய மார்க்கமான இஸ்லாத்தின் தனிச் சிறப்புகளையும், இஸ்லாமிய மார்க்கத்தில் அடிமைத்தனம் இல்லை என்பதையும் இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு கொடுத்துள்ள உரிமைகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார். பொதுக்கூட்டதிற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துர் ரஹீம், தலைமையில் த.மு.மு.க நிர்வாகிகள் S.யூசுப் கான், B.ஷாஜஹான், H.முஹமது சிகந்தர், M.முகமது நஜிமுதீன், H.அப்துல் காசிம், S.நியாஜ் அகமது, E.M.சபுருதீன், M.முகமது சர்புதீன், K.மெய்தீன், M.ஜலாலுதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் K.I.P.P துணை செயலாளர் M.முஹம்மது ஜியாவுதீன் நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இரண்டாயித்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP