அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, February 15, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் (தெற்கு), நிரவி திருபட்டினம் மற்றும் திருநள்ளார் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட காரைக்கால் (தெற்கு), நிரவி திருபட்டினம் மற்றும் திருநள்ளார் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் காரைக்கால் குமரன் ரெசிடென்சியில் மாவட்ட தலைவர் A.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துர் ரஹீம் முன்னிலை வகித்தார் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொது செயலாளர் M.தமீமுன் அன்சாரி மற்றும் த.மு.மு.க மாநில உலமா அணி செயலாளர் S.P.முஹம்மது யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் S. யூசுப் கான் நன்றி கூறினார்.

 முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ம.தமீமுன் அன்சாரி அவர்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வரும் சற்றமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற பாடுபடுவோம், மேலும் வரும் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் (தெற்கு), நிரவி திருபட்டினம் மற்றும் திருநள்ளார் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும். தேர்தல் சட்ட விதிகளின் படி 3 ஆண்டுகளுக்கு மேல் புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றி வரும் I.A.S, I.P.S, PCS அதிகாரிகள் மற்றும் நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். 
  காரைக்காலில் காலியாக உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உள்ள 3000 ௦ க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணியாற்றி வரும் அமைச்சக ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள் அதுபோல் நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் அமைச்சக ஊழியர்களையும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். காரைக்கால் வாஞ்சுரில் இயங்கி வரும் MARG தனியார் துறைமுகத்தில் நிலக்கறி இரக்கப்பட்டு அவைகள் லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்படுகிறது. நிலக்கறியினால் சுற்று வட்டாரத்தில் 10 கிலோ மீட்டர் சுற்றுலவிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அறிய வருகிறது. மேலும் நிலக்கறிகளை லாரிகள் மூலம் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பும் போது அவைகள் முறையாக மூடப்படாமல் கொண்டு செல்வதால் செல்லும் வழியெங்கும் நிலக்கறி கொட்டி அதனாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நிலக்கறிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும், காரைக்கால் பகுதியில் பைபாஸ் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் பகுதியில் டிஜிட்டல் போர்டு வைக்க தடை செய்யபட்டுள்ளதாக கூறி மனிதநேய மக்கள் கட்சி டிஜிட்டல் போர்டு வைக்க எதிர்ப்பு தெரிவித்த காரைக்கால் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் காரைக்கால் நகரில் மற்றும் சுற்றுபகுதிகளில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று வரை டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளதை கண்டு காணாமல் இருப்பதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிப்பதுடன் உடனடியாக அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜிவ்காந்தி மருத்துவ காப்பிட்டு திட்டம் காரைக்காலில் அறிமுகப்படுத்தபட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது அதே வேளையில் சிவப்பு அட்டைக்கு மட்டும் உள்ளதை தமிழகத்தில் உள்ளது போல் அனைத்து அட்டைதாரருக்கும் மருத்துவ காப்பிட்டு திட்டத்தை விரிவாக்க வேண்டும். மேலும் நூற்றுக்கணக்கான சிவப்பு அட்டைதாரர்களின் விபரங்கள் குடிமைப்பொருள் வழங்கு துறையால் கம்யூட்டரில் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளத்தால் மக்கள் அலைக்கழிக்கபடுகின்றனர் அதனை அரசு உடன் சரி செய்ய வேண்டும் "என்றார். இக்கூட்டத்தில் ம.ம.க மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் நாசர், M.A.ஹாஜா நஜிமுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் M.நெய்னா முகமது, மனிதநேய வர்த்தகசங்க மாவட்ட செயலாளர் M.R.சாதிக் அலி, மனிதநேய தொழிற்ச் சங்க மாவட்ட செயலாளர் H.M.இக்பால், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் K.மெய்தீன், த.மு.மு.க மாவட்ட மாணவர் அணி செயலாளர் S.நியாஜ் அகமது,த.மு.மு.க மாவட்ட மருத்துவ அணி செயலாளர் M.முஹமது ஜியாவுதீன், மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், த.மு.மு.க தொண்டர் அணி செயலாளர் H.அப்துல் காசிம், த.மு.மு.க & ம.ம.க நகர தலைவர் H.முஹமது சிகந்தர், த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன், நகர பொருளாளர் H.ஹசனுதீன், ம.ம.க நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், கிளை தலைவர் S.ஹாஜா நஜிமுதீன், M.பஷீர் அஹமது, A.சுல்தான் ஆரிப், A.அப்துல் காதர், B.தஸ்தகிர், கிளை செயலாளர் J.முஹமது அபூபக்கர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP