புதிய நீதி மன்ற கட்டிடம் கட்டித்தராமல் ஏமாற்றிய புதுச்சேரி அரசை கண்டித்து பொது வேலை நிறுத்தம்
காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய நீதி மன்ற கட்டிடம் கட்டித்தராமல் ஏமாற்றிய புதுச்சேரி அரசை கண்டித்து 01-03-2011 அன்று காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய பொது வேலை நிறுத்தம் போரட்டத்திற்கு ஆதரவாக காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நடத்திய ஊர்வலத்திலும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட தலைவர் A . லியாகத் அலி, ம.ம.க மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்கார், த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், மாவட்ட துணை செயலாளர் K.மெய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் M.A.ஹாஜா நஜிமுதீன், நகர தலைவர் H.முஹமது சிகந்தர், நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன், ம.ம.க நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், மற்றும் அணி நிர்வாகிகள் த.மு.மு.க மாவட்ட மருத்துவ அணி செயலாளர் M.முஹமது ஜியாவுதீன், தொண்டர் அணி செயலாளர் H.அப்துல் காசிம், மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊர்வலம் காரைக்கால் நீதிமன்றம் முன்பு நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.