தேர்தல் நிதி வசூல்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் செலவிற்காக தலைமையில் இருந்து காரைக்கால் மாவட்டத்திற்கு என நிதி வசூல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பத்து லட்சத்தை வசூல் செய்வது குறித்து காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் A.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் ம.ம.க மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்கார், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் M.A.ஹாஜா நஜிமுதீன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், த.மு.மு.க மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் A.முகமது தாரிக், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் K.மெய்தீன், மற்றும் அணி செயலாளர்கள் S.நியாஜ் அகமது, M.முஹமது ஜியாவுதீன், H.அப்துல் காசிம், E.M.சபுருதீன், M.நெய்னா முகமது, நகர நிர்வாகிகள் H.முஹமது சிகந்தர், M.முகமது நஜிமுதீன், A.அக்பர் ஷா, H.ஹசனுதீன், M.முகமது சர்புதீன், மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.