அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, March 30, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் நாசர் வெளியிடும் பத்திரிகை செய்தி

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, அகில இந்திய N.R.காங்கிரஸ், தே.மு.தி.க, கம்யூனிஸ்டுகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தலின்படி திருநள்ளார் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ம.ம.க தலைமை செயற்குழு உறுப்பினரும் த.மு.மு.க மாவட்ட செயலாளருமான I.அப்துல் ரஹீம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணியில் புதுச்சேரி மாநிலத்தில் ம.ம.க விற்கு தொகுதி ஒதுக்கப்படாததால் புதுச்சேரி மாநிலத்திற்கு அ.தி.மு.க தலைமை சார்பாக தொகுதி உடன்பாடு தொடர்பாக நியமிக்கப்பட்ட திரு.செம்மலை அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி தலைமையிடம் பேசியதை தொடர்ந்து திருநள்ளார் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வேட்பு மனு செய்த I. அப்துல் ரஹீம் அவர்கள் வாபஸ் பெற்றார். மேலும், மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் ஒரு நியமன சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் ஒரு வாரியமும் தருவதற்கு பரிசிலித்து வருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க, அகில இந்திய N.R.காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பது எனவும் மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP